புகைப்படம் வெளியிட்ட சிம்பு.. மிஸ் பண்ணிய நயன்தாரா... மீண்டும் ஆரம்பமாகும் புதுக் கதை…

3 years ago 552

சிம்பு உடம்பை குறைத்ததில் இருந்தே அவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். மார்க்கெட் இல்லை என்றாலும் அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஆர்வமாக இருப்பதை பார்த்து கோலிவுட் வட்டாரமே பொறாமையில் உள்ளதாம்.

சிம்பு மற்றும் சுசீந்திரன் கூட்டணியில் சிம்புவின் ரீஎன்ட்ரீ படமாக அமைந்தது ஈஸ்வரன். ஆனால் படம் முதலுக்கு மோசம் இல்லை எனும் அளவுக்கு விடுமுறை தினங்களில் வெளியானதால் ஓரளவு கல்லா கட்டியது.

இருந்தாலும் சிம்புவை பழைய மாதிரி அதிரடியாக பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில் தான் அடுத்ததாக வெங்கட் பிரபு மற்றும் சிம்பு கூட்டணியில் மாநாடு படம் வெளியாக உள்ளது. 

கண்டிப்பாக மாநாடு படம் சிம்புவுக்கு ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என இப்போதே செய்திகள் வெளிவந்துள்ளன.

இது ஒருபுறமிருக்க தமிழ்சினிமாவில் ராசியில்லாத தயாரிப்பாளராக வலம் வரும் தயாரிப்பாளர் ஒருவர் சிம்புவை அடிக்கடி சந்திப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

நட்பு ரீதியாக சந்திப்பு இருந்தாலும் விரைவில் இருவரும் இணைந்து ஒரு படம் உருவாக்க உள்ளார்களாம். 

அவர் வேறு யாரும் இல்லை, லிப்ரா புரொடக்ஷன்ஸ் உரிமையாளர் ரவீந்திரன் மற்றும் சிம்பு இடையே ஒரு நல்ல நட்பு வட்டாரம் உருவாகியுள்ளதாம்.

அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் சிம்பு தனது உடல் எடையை குறைத்து கம்பீரமான புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை சிம்பு ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். நயன்தாரா மிஸ் பண்ணிட்டாங்களே!

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...