புதிய அவதாரம் எடுத்த பிக் பாஸ் லாஸ்லியா - ரசிகர்கள் வாழ்த்து

3 years ago 588

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. 

அந்த வகையில் அவர் கைவசம் ‘பிரெண்ட்ஷிப்’, ‘கூகுள் குட்டப்பன்’ மற்றும் இரு படங்கள் உள்ளன. இதில் 'பிரெண்ட்ஷிப்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகிறது.

ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி இருக்கும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்துள்ளார் லாஸ்லியா. 

இந்நிலையில், இப்படத்தின் மூலம் நடிகை லாஸ்லியா, பாடகியாகவும் அறிமுகமாகி உள்ளார். பிரெண்ட்ஷிப் படத்தில் இடம்பெறும் ‘அடிச்சு பறக்கவிடுமா’ என்கிற குத்து பாடலை தேவாவுடன் இணைந்து பாடியுள்ளார் லாஸ்லியா.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...