புது கண்ணம்மாவை ரசிகர்கள் ஏற்கவில்லையா? டிஆர்பி ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மா பின்னடைவு!

3 years ago 475

உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களால் பாரதி கண்ணம்மா சீரியல் விரும்பி பார்க்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், இத்தொடரில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்பிரியனின் நடிப்பும், அந்த கதாபாத்திரத்திற்கான அழுத்தமும் தான். 

இந்த சீரியலுக்கு பிறகு கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் வரத் தொடங்கினர். அதனாலேயே பாரதி கண்ணம்மா சீரியல், எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருந்தது.

இதனிடையே கண்ணம்மாவாக நடித்த ரோஷினி சீரியலில் இருந்து விலகினார். அதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், தற்போது, அவருக்கு பதிலாக புதிய கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.

இவர் டிக்-டாக்கில் மிகவும் பிரபலம். குறிப்பாக திமிரு படத்தில், ஸ்ரேயா ரெட்டி போல ஒப்பனை செய்துக் கொண்டு அவரை போலவே நடித்தது சமூக வலைதளங்களில் வைரலானது. 

அதைப் பார்த்த பலரும் உண்மையில் நீங்கள் ஸ்ரேயா ரெட்டி போலவே இருக்கிறீர்கள் என்று கூறினர். தொடர்ந்து ஐரா படத்தில் நயன்தாரா கருப்புத் தோற்றத்தில் வருவதை போல, வினுஷாவும் ஒப்பனை செய்து நயன்தாராவை போலவே நடித்ததும் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படி இவர் செய்த டிக்-டாக் வீடியோக்கள் தான் கண்ணம்மாவின் கதாபாத்திரத்தில் நடிக்க இவர் காரணமாக அமைந்தது. 

பார்ப்பதற்கும் கண்ணமாவை போலவே டஸ்கி ஸ்கின் கொண்டவர் என்பதால், இவரையே கண்ணம்மாவாக நடிக்க வைக்க சீரியல் குழுவும் முடிவு செய்தது. அதன்படி கடந்த சில வாரங்களாக வினுஷா தேவி புதிய கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.  

அவர் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து நீதிமன்ற காட்சிகள், அடியாட்களிடம் இருந்து அஞ்சலியை மீட்பது, அஞ்சலிக்கு குழந்தை பிறப்பது என பரபரப்பான திரைக்கதை இருந்தாலும், பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை சந்தித்துள்ளது.

வினுஷா தேவியின் நடிப்பைப் பொறுத்தவரையில், அவர் நடிப்பை குறை சொல்ல முடியாது. இப்போது தான் அவர் மெயின்ஸ்ட்ரீமில் வருகிறார் என்பதால் நடிப்பில் இன்னும் முதிர்ச்சி வர சில நாட்களாகும். ஆனால், அவர் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தவில்லை. 

பழைய கண்ணம்மாவின் முகபாவங்களை இமிடேட் செய்வது அப்படியே தெரிகிறது என ரசிகர்கள் கருதுகின்றனர். பழைய கண்ணம்மா இல்லை என்பதாலேயே, பலரும் பாரதி கண்ணம்மா சீரியலை பார்ப்பதை நிறுத்தி விட்டனர். மேலும் பலர் ப்ரொமோக்களை மட்டுமே பார்த்து கதையை புரிந்துகொள்கின்றனர்.

இதனாலேயே பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை சந்தித்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

எவ்வளவு பெரிய சீரியலானாலும் முக்கிய கதாபாத்திரம் மாறும்போது, சற்று பின்னடைவை சந்திக்கும். அதிலும் கண்ணம்மா வெறும் சீரியல் நடிகை மட்டுமல்ல. அவளை தங்கள் வீட்டின் பெண்ணாகவே பலகுடும்பங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.

இருப்பினும் தற்போது வினுஷாவின் நடிப்பை எப்படி விமர்சிக்கிறீர்களோ அதேபோலத்தான், பாரதி கண்ணம்மா சீரியலில், நடிக்க ஆரம்பித்தபோது பழைய கண்ணம்மா ரோஷினியையும் நடிக்கவே தெரியவில்லை. இவரெல்லாம் ஏன் நடிக்க வந்தார் என்று கேட்டார்கள். 

அவர்களை தன் நடிப்பின் மூலம் ஓரங்கட்டி, அவர்களையே தன் ரசிகர்களா மாற்றினார் பழைய கண்ணம்மா ரோஷினி. தற்போது புது கண்ணமா வினுஷா தேவியும் அந்த இடத்தை பிடிக்கிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...