ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் நேற்றைய எபிசோடில் நீதான் என் தம்பியை கொலை செய்தது என்று புஷ்பா மீனாட்சியை திட்டி விட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறாள்.
மேலும் புஷ்பா நீதிமணியை பார்த்து மீனாட்சி தான் என் தம்பியை கொலை செய்தது என்று சண்டை போட சங்கிலியை கொன்னது மீனாட்சி தான் என்று இன்ஸ்பெக்டரிடம் பணம் கொடுத்து மீனாட்சியை கைது செய்ய வேண்டும் என புஷ்பா இன்ஸ்பெக்டரிடம் சொல்லுகிறாள்.
அடுத்து இன்ஸ்பெக்டர் புஷ்பாவிடம் ஒரு கம்ப்ளைன்ட் எழுதி வாங்கிக் கொள்கிறார். இந்த பக்கம் சங்கிலியை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்று மீனாட்சி சாந்தாவிடம் சொல்லிக் கொண்டிருக்க அப்போது மெஸ்ஸுக்கு போலீஸ் வருகிறது.
மீனாட்சியை தேடி வந்த போலீஸ் மெஸ்ஸுக்குள்ளே வந்து அராஜகமாய் சோதனை செய்து மீனாட்சி தான் கொலை செய்தாள் என்று போலீஸ் சொல்ல சாந்தாவும் யமுனாவும் போலீசிடம் மீனாட்சி கொலை செய்யவில்லை என்று கெஞ்சுகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன? இந்த கொலை கேசில் இருந்து மீனாட்சி எப்படி தப்பிக்க போகிறாள்? சக்தி என்ன செய்யப் போகிறாள் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.