லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடித்துள்ள “பூமி” படம் ஜன.,14ல் ஓடிடியில் வெளியாகிறது.
விண்வெளிக்கு செல்லும் சாகச பயணத்திற்கு முன் ஒரு தனி மனிதன், தன் சொந்த ஊரில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த முயலும் போராட்டம் தான் கதை.
நிதி கூறுகையில், ''பொதுவாக நியாயத்திற்காக, லட்சியத்திற்காக போராடும் நாயகனின் கதைகள், நாயகி பாத்திரம் கவனிக்கும்படியாக இருக்காது.
ஆனால் பூமி அதிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. இதில் எனது கதாபாத்திரம் முக்கியத்துவம் கொண்டது. என் நடிப்பு திறமையை காட்டும் ஒரு வேடம் கிடைத்தது பெருமை.
ஜெயம் ரவியின் 25வது படத்தில் பங்கு கொண்டதை நான் பெருமையாக கருதுகிறேன். அனைத்து இடங்களிலும் எளிதில் கொண்டாடும்படியான படைப்புடன் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் லக்ஷ்மன்'' என்கிறார்.