'பூவே உனக்காக' படத்தில் நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகரா?

3 years ago 257

செண்டிமெண்டுக்கு குறை இல்லாமல் படங்களை இயக்கும் இயக்குனர், விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பூவே உனக்காக'.

நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், சங்கீதா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் அஞ்சு அரவிந்த், சார்லி, எம்.என்.நம்பியார், நாகேஷ், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

காதல், குடும்ப செண்டிமெண்ட், காமெடி என அனைத்து அம்சங்களும் கலந்து உருவான இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது, நவரச நாயகன் கார்த்திக் தானாம். இதனை இந்த படத்தின் இயக்குனரான, விக்ரமன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

ஒரு சில காரணங்களால், நடிகர் கார்த்திகால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக, 'பூவே உனக்காக' படத்தில் நடிக்கும் வாய்ப்பு விஜய்க்கு சென்றது. தொடர்ந்து, காதல், ஆக்ஷன் போன்ற கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த விஜய்யின் வேறு விதமான நடிப்பை இந்தப்படம் வெளிக்காட்டியது.

பல திரையரங்கங்களில் வெளியாகி 200 நாட்களுக்கு குறைவில்லாமல் ஓடிய திரைப்படம் என்கிற பெருமையையும் இந்த படம் பெற்றது. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சவுத்திரி தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...