பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்த திரிஷா

3 years ago 269

தென்னிந்திய சினிமாவில் 19 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. 

தமிழில் இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் திரிஷா சைக்கிளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

இதைப்பார்த்த ரசிகர்கள் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி இருப்பதால் அதை கிண்டல் செய்யும் விதமாக சைக்கிள் புகைப்படத்தை அவர் வெளியிட்டு இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆனால் திரிஷா, இதுதான் என்னுடைய புதிய சைக்கிள். நல்ல மூடுக்கு ஒரு ரைட் போதும், என்று குறிப்பிட்டுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...