பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ நடிகை

3 years ago 338

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிரஞ்சனி. 

பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு வருகிற 25-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை தான் அவர் திருமணம் செய்ய உள்ளார்.

இந்நிலையில், திருமணத்திற்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில், நடிகை நிரஞ்சனி பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி உள்ளார். இந்த பேச்சிலர் பார்ட்டியில் நிரஞ்சனியின் மூத்த அக்காவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான கனி, இரண்டாவது அக்காவும், நடிகையுமான விஜயலட்சுமி மற்றும் தோழிகள் கலந்து கொண்டனர்.

தங்கையின் பேச்சிலர் பார்ட்டியில் எடுத்த புகைப்படங்களை நடிகை விஜயலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. நிரஞ்சனி – தேசிங்கு பெரியசாமி திருமணம் வருகிற 25-ந் தேதி பாண்டிச்சேரியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...