பொலிஸ் கெட்டப்பில் நடிகை காஜல் அகர்வால்.! எந்த படமாக இருக்கும்.?

4 years ago 338

தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால்.

தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன்-2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா ,நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஏய் சினாமிகா மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் "லைவ் டெலிகாஸ்ட்' என்ற வெப்தொடரிலும்   நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவருக்கு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்று, அவர்களது ஹனிமூன் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதும் , அது வைரலானதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின் இவர் நடிக்கும் படத்தில் இவரது கேரக்டர் குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

திருமணத்திற்கு பின் காஜல் அகர்வால் நடிக்கும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் . போலீஸ் கெட்டப்பில் உள்ள அந்த புகைப்படத்தை நடிகர் மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இது எந்த படம் என்று கேள்வி கேட்டு வருகின்றனர். ஏற்கனவே விஜய்யின் ஜில்லா படத்தில் காஜல் போலீஸ் அதிகாரியாக நடித்து கலக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...