கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் தற்போது மாமன்னன் படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அடுத்தடுத்து ரகு தாத்தா, சைரன் போன்ற படங்களிலும் நடித்துவருகிறார் கீர்த்தி.
தெலுங்கில் நானியுடன் கீர்த்தி நடித்துள்ள தசரா படம் வரும் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டிய படத்தின் பிரமோஷன்களில் தற்போது கீர்த்தி பிசியாக பங்கேற்று வருகிறார்.
இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பாடல் வெளியீடு மும்பையில் நடைபெற்றது. இதில் கலக்கலான ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் கூடிய புடவையில் கீர்த்தி சுரேஷ் கலந்துக் கொண்டார்.
இந்தப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சரக்கு பாட்டிலை கொண்டுவந்த கீர்த்தி சுரேஷ், அதை கல்ப்பாக அடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
இதையடுத்து அந்த பாட்டிலில் இருந்தது சரக்கு இல்லை என்றும் குளிர்பானம் என்றும் தெரிந்தது. இந்த நிகழ்வின்போது நடிகர்கள் நானி மற்றும் ராணா உள்ளிட்டவர்களும் உடல் இருந்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.