மகளுக்கு ஹீரோ தேடும் குஷ்பு.. இரவு - பகலாக அனல் பறக்கும் நடிப்பு பயிற்சி!

3 years ago 417

தமிழ் சினிமாவில் வருங்காலத்தில் அடுத்த வாரிசு நடிகைகளாக களமிறங்க குஷ்பு மற்றும் சுந்தர் சி ஆகியோரின் மகள்களில் ஒருவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கள் எழுந்துள்ளன.

தமிழ் சினிமாவில் பக்கா கமர்சியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அதேபோல அந்த கால இளைஞர்களை ஆட்டி வைத்த பெருமை குஷ்புவுக்கு உண்டு. மொத்த தென்னிந்திய சினிமாவையும் தன்னுடைய கைக்குள் கசக்கி வைத்திருந்தார் என்று சொன்னால் மிகையாகாது.

தென்னிந்திய ரசிகர்களிடம் ஒரு வீக்னெஸ் உண்டு. கொழுக் மொழுக் என ஒரு நடிகையை பார்த்து விட்டால் அவர்களை உச்சத்திற்கு கொண்டு செல்லாமல் விடமாட்டார்கள். அந்த வழியில் மாபெரும் வரவேற்பை பெற்று தற்போது அரசியல்வாதியாகவும் ஜொலித்துக் கொண்டிருப்பவர் குஷ்பூ.

சினிமா, சீரியல் என கலந்து கட்டிய குஷ்பூ தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து விட்டு அண்ணாத்த திரைப்படத்தின் மூலம் தன்னுடைய வயதுக்கேற்ற ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க திட்டம் போட்டு களமிறங்கியுள்ளார்.

ஆனால் இது எல்லாமே அவருடைய மகளை எப்படியாவது ஒரு முன்னணி நடிகரின் மகனுக்கோ அல்லது முன்னணி நடிகருக்கோ ஜோடியாக்கி விட வேண்டும் என்ற ஆசைதானாம். இதற்காக தற்போது தன்னுடைய மகளுக்கு நடிப்பு பயிற்சி வீட்டிலேயே வழங்கப்பட்டு வருகிறது.

இதைக் கேள்விப்பட்ட கோலிவுட் வாசிகள் குஷ்புவின் மகள்கள் இருவருமே ஹீரோயின் ரேஞ்சுக்கு கொண்டாடுவார்களா என்பது சந்தேகம் தான் என ஆரம்பத்திலேயே அவர்கள் சங்கடப்படும் விதமாக கருத்துகளை தெரிவித்து வருகிறார்களாம். இருந்தாலும் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை நம்பி களம் இறங்கியுள்ளது குஷ்பு குடும்பம்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...