மகளை ஹீரோயினாக களமிறக்க முயற்சிக்கும் 90 களின் பிரபல நடிகை...யாருன்னு தெரியுமா ?

3 years ago 419

வாரிசுகளை சினிமாவில் களமிறக்குவது ஒன்றும் புதிதல்ல. நடிகர், நடிகைகள் பலரும் தாங்கள் புகழின் உச்சியில் இருக்கும் போதே வாரிசுகளை சினிமாவில் நுழைத்து அழகு பார்த்துள்ளனர். 

நடிகர்கள் மட்டுமல்ல டைரக்டர்கள், தயாரிப்பாளர்களும் தங்களின் வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அப்படி வந்த வாரிசு நடிகர்களில் ஒரு சிலர் மட்டுமே கொடி கட்டி பறக்கின்றனர். நடிகர்களில் கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக், விக்ரம், ஜெயம் ரவி, அருண் விஜய் என பலரும் வாரிசுகளை கொண்டு வந்து விட்டனர். 

இதே போல் நடிகைகளில் ராதா, ஜெயசித்ரா, மீனா உள்ளிட்ட சிலரும் தங்கள் பிள்ளைகளை நடிக்க வைத்து விட்டனர்.

அந்த வரிசையில் 1980, 90 களில் பிரபல நடிகையாக இருந்த சிவரஞ்சனியும் தனது மகளை சினிமாவில் ஹீரோயினாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளாராம். 

கார்த்திக்குடன் மிஸ்டர் கார்த்திக் என்ற படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் சிவரஞ்சனி. பிறகு கமலுடன் கலைஞன், பிரபுவுடன் சின்ன மாப்பிள்ளை, விஜயகாந்துடன் ராஜ துரை, கார்த்திக்குடன் காத்திருக்க நேரமில்லை, தாலாட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

வண்டிச்சோலை சின்னராசு உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவிற்கு தங்கை ரோலிலும் நடித்துள்ளார். பிரசாந்த் ஹீரோவாக அறிமுகமான காலத்தில் அவருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்து, காதல் கிசுகிசுக்களில் அதிகம் பேசப்பட்டவரும் சிவரஞ்சனி தான்.

பிறகு தெலுங்கிற்கு சென்ற சிவரஞ்சனி, ஓஹா என பெயரை மாற்றிக் கொண்டு பல படங்களில் நடித்தார். தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருந்த ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து, 1997 ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரோஷன், மேதா, ரோஹன் என 3 பிள்ளைகள் உள்ளனர்.

மூத்த மகனான ரோஷன் சமீபத்தில் தான் நிர்மலா கான்வென்ட் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்டார். தற்போது 17 வயதாகும் மகள் மேதாவில் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். அதனால் அவரையும் ஹீரோயினாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் சிவரஞ்சனியும், ஸ்ரீகாந்த்தும் இறங்கி உள்ளார்களாம்.

டாப் டைரக்டர் ஒருவரின் படத்தில் மேதாவை அறிமுகப்படுத்துவதற்காக முயற்சி நடந்து வருகிறதாம். மேதா, பரதநாட்டியம் பயின்றவராம். பாஸ்கட்பால் விளையாட்டில் தேசிய அளவிலான வீராங்கனையாம். 

மேதா இதற்கு முன் அனுஷ்கா ஷெட்டி நடித்த ருத்ரமாதேவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளாராம். அதனால் அவருக்கும் சினிமா ஒன்றும் புதிதில்லையாம்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...