மகிழ்ச்சியில் போனிகபூர்.. கவலையில் தல அஜித்... என்ன நடந்தது?

3 years ago 851

அஜித் நடிப்பில் உருவான வலிமை படத்தை பொங்கல் அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சமீபத்தில் வலிமை படத்தை திட்டமிட்டபடி வெளியாகாது என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் அஜீத் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

ஆனால் சமீபத்தில் அஜித் மீண்டும் எச் வினோத் உடன் கூட்டணி அமைத்து AK 61 நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இப்படத்தின் பூஜை ஞாயிற்றுக்கிழமை அன்று போட இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக திங்கட்கிழமை அன்று இப்படத்தின் பூஜை போட உள்ளனர்.

அதாவது அஜித் நடிப்பில் உருவான வலிமை படம் 3 வருடங்களாக வெளியாகாமல் உள்ளது. அதனால் அஜித் தற்போது வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அஜித் நடிப்பில் உருவான படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகே அடுத்த படத்தின் மீதான கவனம் செலுத்துவார். ஆனால் வலிமை படம் வெளியாகாத நிலையில் அஜித் அடுத்த படத்தில் நடிப்பதற்கு தயக்கம் காட்டி வருவதாக கூறி வருகின்றனர்.

வலிமை படம் சொன்னபடி வெளியாகாமல் போனது பற்றியும் போனிகபூர் கூட கவலை படவில்லை ஆனால் அஜித் தான் அதிக கவலை பட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர். 

போனி கபூர் கவலைப்படாமல் இருப்பதற்கு காரணம் வலிமை படம் எப்போது வந்தாலும் வெற்றி பெறும் அதனால் அஜித் கவலைப்பட வேண்டாம் என போனி கபூர் கூறியுள்ளார்.

போனிகபூர் சொன்னதால் தற்போது அஜித் தனது நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் மீதான கவனம் செலுத்துவதாகவும் இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க எச் வினோத் இயக்க இருப்பதாகவும் மேலும் இப்படத்தை கூடிய விரைவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...