மகேஷ் பாபு-கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு ஆரம்பம்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

3 years ago 215

நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.  

இவரது நடிப்பில் வெளியான "சர்ரியலேரு நிவ்வரு"  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக  கீதா கோவிந்தம் படத்தினை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

SarkaruVaariPaata என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் .மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் தற்போது SarkaruVaariPaata படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது .இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் SarkaruVaariPaata என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...