மணப்பெண் கோலத்தில் சீரியல் நடிகை வெளியிட்ட ஃபோட்டோ! ரசிகர்கள் ஷாக்

3 years ago 482

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோ பாரதியின் தம்பி அகிலின் மனைவி அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகை கண்மணி மனோகரன்.

விஜய் டிவி-யில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலை பற்றி சொல்லவே தேவை இல்லை. இதற்குள்ள ரசிகர் வட்டம் எவ்வளவு பெரியது என்பதை சின்னத்திரை ரசிகர்கள் நன்றாகவே அறிவார்கள். 

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக மேயாத மான் படத்தில் துணை நடிகராக நடித்த அருண் பிரசாத் பாரதியாகவும், பிரபல மாடலும் நடிகையுமான ரோஷினி ஹரிபிரியன் கண்ணம்மாவாகவும் நடித்து வருகின்றனர்.


நடிகை ரோஷினிக்கு சினிமா வாய்ப்பு கிடைத்திருப்பதால் விரைவில் சீரியலை விட்டு விலக உள்ளதாகவும், புதிய கண்ணம்மாவாக வேறு ஒருவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு விரைவில் அந்த எபிசோட்கள் ஒளிபரப்பாக உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த சீரியலில் ஹீரோ பாரதியின் தம்பி அகிலின் மனைவி அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகை கண்மணி மனோகரன். கண்ணம்மாவின் தங்கையாக (சித்தி மகள்) நடித்து வரும் நடிகை கண்மணிக்கு துவக்கத்தில் ரசிகர்களின் எதிர்ப்பு அதிகமாக இருந்தது.


ஏனென்றால் கண்ணம்மாவிற்கு எதிராக செயல்படும் கேரக்டராக அஞ்சலி கேரக்டர் காட்டப்பட்டு வந்தது. தற்போது 8 வருடங்களுக்கு பிறகான கதை என்பதால் அஞ்சலி கர்ப்பமாக இருப்பதை போலவும், பாரதியை பிரிந்து வாழும் கண்ணம்மாவிற்கு ஆதரவாக இருப்பதை போலவும் காட்டப்பட்டு வருகிறது. 

இதனால் இவரது நடிப்பு மாறும் அழகால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் ஏராளமானோர் இவரை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்து வருகின்றனர்.

கர்நாடகத்தின் பெங்களூரில் பிறந்த நடிகை கண்மணியை சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாவில் ஃபாலோ செய்து வரும் நிலையில், அவ்வப்போது ரீல் வீடியோக்கள் மற்றும் ஃபோட்டோ ஷூட்களை ஷேர் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். 


இதனிடையே சமீபத்தில் தீபாவளியையொட்டி லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட தனது ஃபோட்டோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து Happy Diwali everyone என்று தீபாவளி வாழ்த்துக்களை கூறி இருக்கிறார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...