மணிமேகலைக்கு ஏற்பட்ட விபத்து: 'குக் வித் கோமாளி'யில் இருந்து விலகல்?

3 years ago 370

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், பிரபலமான மணிமேகலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தற்போது ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் மணிமேகலை. 

முதல் சீசனை தொடர்ந்து அந்நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் மணிமேகலை இடம்பெற்றிருக்கும் நிலையில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பதில் தான் ஒரு சிறிய விபத்தில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக மணிமேகலை பதிவிட்டுள்ளார். 

மேலும் அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது, “ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை. ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை. சமீபத்தில் இதை படித்தேன். நன்றாக இருந்தது.

எனக்கு சிறிய விபத்து நடந்தது. ஆனால் தற்போது எல்லோரும் நலம். அடுத்த இரண்டு வாரங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும், மற்ற நிகழ்ச்சிகளை ஒரு வாரமும் மிஸ் செய்வேன். 

எனது குழுவினரையும் மிஸ் செய்வேன். முக்கியமா சுடு தண்ணி தூக்கும்போது பாத்து தூக்குங்க” என்று தெரிவித்துள்ளார்.

மணிமேகலையின் இந்த பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவரை நலம் விசாரித்தும் அவர் நலமடைந்து விரைவில் திரும்ப வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...