மறைந்த பின்பும் சித்ராவின் பிறந்தநாளை கொண்டாடிய பெற்றோர்கள் ! கண்கலங்கிய ரசிகர்கள்!

3 years ago 312

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரம் மூலம் அனைவரின் வீட்டிலும் வாழ்ந்து வந்தவர் நடிகை சித்ரா.

எப்போதும் சிரித்த முகத்துடன், எல்லோருடனும் சகஜமாக பழகியவர் திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

அவரது இழப்பு அப்பொழுது ரசிகர்களால் தாங்க முடியவில்லை தற்போது வரை அவரது புகைப்படங்கள் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சித்ராவின் பிறந்தநாளில் அவரது பெற்றோர்கள் அவரது புகைப்படத்தை வைத்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்கள்.

சித்ராவின் அப்பா கேக் வெட்டி அவரது புகைப்படத்திற்கு ஊட்டும் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் தானாக வெளிவருகிறது என கூறி பகிர்ந்து வருகிறார்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...