மலையாளத்தில் அறிமுகமாகும் ஸ்ரீதிவ்யா

3 years ago 272

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதையடுத்து காக்கிசட்டை, காஷ்மோரா, ஜீவா, ஈட்டி, மருது என அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வந்த அவர், கடைசியாக 2017ம் ஆண்டு வெளியான ‛சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரீ திவ்யா தற்போது, மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அடுத்ததாக விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக, மழை பிடிக்காத மனிதர் படத்தில் நடிக்கிறார். அதேபோல் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் பிரித்விராஜ் நாயகனாக நடித்துள்ள ‘ஜன கண மண’ படத்தில் நடிகை ஸ்ரீ திவ்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்றி வெளியான இப்படத்தின் புரோமோ யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...