மளமளவென எடையை குறைத்தது இப்படி தானா? ரகசியத்தை வெளியிட்ட நடிகை குஷ்பு..!!

3 years ago 395

தன்னுடைய உடல் எடையை குறைத்து, இளம் நடிகை போல் ஜொலிக்கும் நடிகை குஷ்புவிடம், (Kushboo) ரசிகர்கள் பலரும் உங்கள் எடையை எப்படி குறைதீர்கள் என்கிற ரகசியத்தை சொல்லுங்கள் என, தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், இந்த ரகசியத்தை தெரிவிக்கும் விதமாக இவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

80 மற்றும் 90 களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த குஷ்புவுக்கு தற்போது வரை ஏராளமான ரசிகர் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும், பல படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். 

அதே போல் சின்னத்திரையிலும், சீரியல் நடிகை, தொகுப்பாளினி, நடன நிகழ்ச்சி நடுவர் என ஒரு கலக்கு கலக்கினார். நடிப்பை தாண்டி குஷ்புவிற்கு அரசியலிலும் அதீத ஆர்வம். திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

தன்னுடைய வேலைகளில் படுபிசியாக இருந்தாலும், குஷ்பு பொறுப்பான குடும்பத் தலைவியாக தனது கடமைகளில் இருந்து ஒரு போதும் தவறியதே கிடையாது. சோசியல் மீடியாவில் கூட கணவர் சுந்தர் சி, மகள்கள் அவந்திகா, அனந்திதா பற்றிய அப்டேடுகளையும், குடும்ப புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இவர் போடும் பதிவுகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு குஷ்பு தான் ஜோடி என்றும், இல்லை வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும், உறுதியான தகவல் வெளியாகவில்லை. இந்த படத்தில் நடிக்க துவங்கிய போதில் இருந்தே... குஷ்புவின் உடல் இடையிலும் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வந்தது.

இப்போது ரசிகர்கள் அனைவரும் ஆச்சர்யப்படும் படியாக தன்னுடைய எடையை சரமாரியாக குறைத்து, செம்ம ஸ்லிம் ஃபிட்டாக மாறினார். இவரது இந்த அதிரடி மாற்றம் எப்படி நடந்தது, இவர் எப்படி தன்னுடைய எடையை குறைத்தார் என, தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது முதல் முறையாக அந்த ரகசியத்தை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

குஷ்பு நடை பயிற்சி செய்யும் இந்த வீடியோவில், நடை பயிற்சி செய்வதால் உடல் நிலை நன்றாக இருக்கும்,  தொடர்ந்து நடந்தால் உங்களுடைய எடையும் குறையும் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...