மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகளா? புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்!

3 years ago 329

விஜய் டிவியின் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கிய அது இது எது என்ற நிகழ்ச்சி மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்றது.

மாகாபா 6 வருடம் துபாயில் ரேடியோ மிர்ச்சியில் வேலை பார்த்தார். பின்பு இந்தியா வந்த விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்தார். 

அது இது எது, சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆப் டான்ஸ், KPY சாம்பியன்ஸ் மற்றும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சிகளை மாகாபா தொகுத்து வழங்கியுள்ளார்.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தில் மற்றொரு ஹீரோவாக நடித்து இருப்பார். 

மாகாபா தன்னுடன் கல்லூரியில் படித்த ஆங்கிலோ இந்தியன் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்கள்.

கொரோனா காலகட்டத்தில் வேலையில்லாமல் இருக்கும் போது செலிபிரிட்டி எல்லாம் யூடியூப் சேனல் ஆரம்பிச்சாங்க.’மிஸ்டர் மாகாபா’ என்று மாகாபா ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்தார். சமீபத்தில் இவரது 15வது வருட திருமண நாளைக் கொண்டாடினார். 

விஜய் டிவி நட்சத்திரங்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.அதை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டார். அந்த வீடியோ 3.5 மில்லியன் வியூஸ் சென்றது. அந்த வீடியோவில் மாகாபாவின் மகள் அனலியா லேகா பார்த்த ரசிகர்கள் மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகளா என அதிர்ச்சியடைந்தனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...