மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த 'சில்லுக்கருப்பட்டி' நடிகர்.!

3 years ago 243

சமீபத்தில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சில்லுக்கருப்பட்டி . சிறு பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பல பிரபலங்களின் பாராட்டுகளை பெற்றது .

இதில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீராம்.இவர் Kravmaga என்ற தற்காப்பு கலை நிபுணர்.

தமிழக காவல்துறை கமாண்டோ படை மற்றும் சென்னை நகர காவல்துறையினருக்கு  Kravmaga என்ற இஸ்ரேல் தற்காப்பு கலையை கற்பித்தார்.

அதனுடன் இந்த கலையை அதோ அந்த பறவை போல படத்திற்காக  அமலா பாலுக்கும் பயிற்சி கொடுத்திருந்தார் . இந்த நிலையில் இன்று அவர் மாடியிலிருந்து தவறி விழுந்ததால் உயிரிழந்துள்ளார்.

தற்காப்பு கலைக்கான பயிற்சியை செய்து கொண்டிருந்த போது மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.தற்போது இவரது மறைவுக்கு பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...