மாறன் சகோதரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு: வைரல் புகைப்படம்

3 years ago 199

தளபதி விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் ’பீஸ்ட்’ படப்பிடிப்பில் விஜய், பூஜா ஹெக்டே கலந்து கொள்ளும் டூயட் பாடலின் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஜய் கலந்து கொண்டபோது நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பாடகர் கிரிஷ் உள்ளிட்ட ஒரு சிலரை சந்தித்து அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரல் ஆனது.


இந்த நிலையில் சற்று முன்னர் இதே நிகழ்ச்சியில் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர்களுடன் விஜய் இருக்கும் புகைப்படம் வெளிவந்துள்ளது. 

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ’பீஸ்ட்’ படத்தில் விஜய் தற்போது நடித்து வரும் நிலையில் மாறன் சகோதரர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

செய்திகள், வீடியோக்கள் பார்க்க அப்பப்போ சினிமா Youtube-ல் Subscribe பண்ணுங்க.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...