மாற்றங்களுடன் பாபா மீண்டும் வெளியீடு... திடீர் மாற்றம்

2 years ago 268

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

வரும் டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் அவரது தயாரிப்பில் வெளியான பாபா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

ஏற்கனவே வெளியான பாபா பட பதிப்பில் சில மாற்றங்களை செய்துள்ளனர். மேலும் ரஜினி மீண்டும் டப்பிங் பேசி இருந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன. 

இப்படியான நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படத்தின் ரிலீஸ் தேதி பட குழு திடீரென டிசம்பர் பத்தாம் தேதிக்கு மாற்றியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...