மாலத்தீவுக்குப் பறந்த முன்னணி நடிகை… அவர் கூறிய காரணம் தெரியுமா?

3 years ago 315

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமானத்தில் பறப்பதை போல ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். 

மேலும் இந்தப் பயணத்தைத் தான் தேர்வு செய்ததற்கான காரணம் என்ன என்பதைக் குறித்தும் தன்னுடைய பதிவில் தெரிவித்து உள்ளார்.

சமீபகாலமாக மாலத் தீவுக்குச் செல்லும் சினிமா பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. 

நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய கணவருடன் தேனிலவுக்கு சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். 


நடிகை சமந்தா, ரகுல் ப்ரீத்தி சிங், பிரணிதா, வேதிகா, ஹன்சிகா, விஷல்பா ஷெட்டியைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணுவிஷாலும் மாலத்தீவுக்கு சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். 

இந்தப் பட்டியலில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்ஷும் இணைந்து உள்ளார்.

அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ள வீடியோவில் விடுமுறைக்கு மாலத்தீவுக்கு சென்று கொண்டு இருப்பதாகக் கூறியதோடு தான் இந்தப் பயணத்தைத் தேர்வு செய்ததற்கு காரணமும் உண்டு எனக் கூறியுள்ளார். 

அதில் “கடல் மீது ஒரு விமானப் பயணம், 30 நிமிட விமானப் பயணத்தில் தெரியும் குட்டிக் குட்டி ரிசார்ட்டுகள், ரம்மியம்மிக்க இயற்கை… கற்பனை செய்து பாருங்கள்.. நினைத்தப்படி அமைந்து இருக்கிறது” எனக் கூறியதோடு சிறந்த கடல் மீதான விமானப் பயணத்திற்கு மாலத்தீவு ஏற்றது எனக் குறிப்பிட்டு உள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...