மாலையும் கழுத்துமாய் மணக்கோலத்தில் சோம்-ரம்யா: என்ன நடந்தது?

3 years ago 974

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்ட சோம் மற்றும் ரம்யா திடீரென மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா முதல் நாளன்றே சோம்சேகரின் நண்பராக மாறினார். அவர் கொடுத்த சாக்லேட்டை இறுதி நாள் வரை வைத்திருந்து அந்த சாக்லேட் கவரை அவர் எவிக்ட் ஆகும்போது ரம்யாவிடம் கொடுத்துவிட்டு சென்றார். 


இந்த சாக்லேட் கவர் தனக்கு ஒரு ஸ்பெஷல் என்றும் உணர்ச்சிவசப்பட்டு ரம்யா கூறினார் என்பது தெரிந்ததே

அதேபோல் சோம், ரம்யா ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா? என்று கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரம்யாவின் சகோதரர் ’அது அவர்களுடைய விருப்பம் என்று பதிலளித்திருந்தார்

இந்த நிலையில் திடீரென தற்போது ரம்யா மற்றும் சோம் ஆகிய இருவரும் மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

இதுகுறித்து விசாரித்தபோது இது நெட்டிசன்கள் ஒருவரின் போட்டோஷாப் கைவண்ணத்தில் ஆன புகைப்படம் என்று தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து சோம் மற்றும் ரம்யா ஆகிய இருவருமே நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கின்றோம் என்றும், தயவுசெய்து இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.









NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...