மாளவிகா மோகனன் வருத்தம்

4 years ago 232

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்த அவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில், பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து நின்றுபோன படம் குறித்த புதிய தகவலை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு பஹத் பாசில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. அந்தப் படத்தில் பழங்குடியினப் பெண்ணாக மாளவிகா மோகனன் நடித்தார்.

20 நாட்கள் மட்டுமே அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. 30 சதவீத காட்சிகளே படமாக்கப்பட வேண்டியிருந்த நிலையில், திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டதாக மாளவிகா மோகனன் வருத்தத்துடன் கூறியுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...