ஒரு வருட காலத்தின் பொறுமைக்கு பிறகு நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் கடந்த 13ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு தியேட்டர்களில் 50% இருக்கைகளுடன் வெளியாகியது.
முதல் நாள் காலையில் இருந்தே கொண்டாட்டத்தை ஆரம்பித்து தற்போது வரை மாஸ்டர் பொங்களாக இருந்து வசூல் சாதனையை பெற்று வருகிறது மாஸ்டர் படம்.
இந்நிலையில், தல அஜித்தின் வலிமை பட அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு பொங்கள் பரிசாக சன் நிருவனம் அஜித்தின் விசுவாசம் படத்தின் ஞாயிறு மாலை அவர்களின் சேனலில் ஒளிப்பரப்பு செய்துள்ளது.
இதனை அஜித்தின் ரசிகர்கள் இந்தியா முழுவதும் டிரெண்ட் செய்து அசத்தியுள்ளனர். #ViswasamOnSunTv என்ற ஹாஷ்டேக்கினை பயன்படுத்து ரசிகர்கள் டிவிட் செய்து டிரெண்ட்டாக்கி பொங்களை நிறைவு செய்துள்ளனர்.