மாஸ்டர் காட்சிகள் லீக் - படக்குழுவினர் அதிர்ச்சி

4 years ago 232

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் நாளை மறுதினம் உலகமெங்கும் வெளியாகவுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. 

லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படம் கொரோனா காரணமாக சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. 

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவரும் இந்தத் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன.

வாட்ஸ்அப் உட்பட பல சமூக வலைதளங்களிலும் அவை பரப்பப்பட்டு வருகின்றன. இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம், வெளியாக வெறும் ஒரு நாளே இருக்கும் இந்த வேளையில் இப்படிப் படத்தின் காட்சிகள் வெளியாகியிருப்பது படக்குழு மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

"மாஸ்டரை உங்களிடம் எடுத்துவர ஒன்றரை வருடங்கள் உழைத்திருக்கிறோம். எல்லாம் நீங்கள் திரையரங்குகளில் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான். கசிந்த காட்சிகளை தயவுசெய்து பகிராதீர்கள். 

அனைவருக்கும் நன்றி. ஒரு நாள்தான், அதன் பின் மாஸ்டர் உங்கள் சொத்து!" என்று ட்வீட் செய்திருக்கிறார் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...