'மாஸ்டர்' சாதனையை முறியடித்த 'பீஸ்ட்'... பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தகவல்

3 years ago 309

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் சாதனையை அவரது அடுத்த திரைப்படமான ‘பீஸ்ட்’முறியடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று விஜய் 47-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டதை அடுத்து அவர் நடித்து வரும் 65வது திரைப்படமான ‘பீஸ்ட்’படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வெளியான ‘பீஸ்ட்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் 21 மணி நேரத்தில் 2.73 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் பெற்று இந்தியாவிலேயே மிக வேகமாக அதிக லைக்ஸ்கள் பெற்ற சாதனையை பெற்றுள்ளது.

இதனையடுத்து விஜய்யின் முந்தைய படமான ‘மாஸ்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய்யின் சாதனையை விஜய்யே அவ்வப்போது முறியடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு அவரது சாதனை அவராலேயே முறியடிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்து வருகிறார். மேலும் யோகி பாபு, விடிவி கணேஷ் கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...