மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகிறது தெரியுமா.?

4 years ago 287

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13-ம் திகதி பொங்கல் விருந்ததாக வெளியான திரைப்படம் மாஸ்டர். 

விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்தின் ரிலீஸ்  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  தள்ளி சென்றது. 

அதன் பிறகு தற்போது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. 

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்திற்கான ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் மாஸ்டரின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதாவது திரையரங்குகளில் படம் வெளியாகி குறைந்தது ஒரு மாதம் பின்னரே ஓடிடியில் வெளியிடுவது வழக்கம் . இந்த நிலையில் மாஸ்டர் படத்தினை அதற்கு முன்னரே வெளியிட உள்ளதாகவும் , கூடுதலாக பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...