மாஸ்டர் படத்தின் மாஸான புதிய புரோமோ: விஜய் சேதுபதி டான்ஸ்

4 years ago 305

நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. போதாதற்கு மாஸ்டர் படக்குழுவினர் நாளொரு புரோமோ வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்து அவர்களை கொண்டாட்ட மன நிலையிலேயே வைத்துள்ளனர்.

அந்த வகையில், வெளியிடப்பட்ட மாஸ்டர் படத்தின் புதிய புரோமோ வீடியோவில் மாஸ்டர் ஹீரோ விஜய்யும் வில்லன் விஜய் சேதுபதியும் ஒன்றாக சேர்ந்து அடித்து துவம்சம் செய்யும் சண்டைக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளனர்.

கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு திரைக்கு வரும் மிகப் பெரிய நட்சத்திர நடிகரின் படமாக மாஸ்டர் ரிலீஸ் ஆகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் ஆகும் மாஸ்டர் படத்துக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

திரையரங்குகளில் 50% இருக்கைகள் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மாஸ்டர் படம் கூடுதலாக 500 திரையரங்குகளில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மாஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வேண்டும் என்று நோக்கத்தில் மாஸ்டர் படக்குழு தினம் ஒரு புரோமோ வீடீயோ வெளியிட்டு வருகின்றனர். எல்லா வீடியோக்களையும் ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

மாஸ்டர் படத்தில் இருந்து இதுவரை 5 புரோமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் புரோமோ வீடியோவில் விஜய் வாத்தியாக நடனம் ஆடினார். 2வது வீடியோவில் விஜய், முடிஞ்சா தொடச் சொல்றா பார்ப்போம் என்று பன்ச் வசனம் பேசினார். 3வது வீடியோவில் கல்லூரிக்குள் புகுந்த ரவுடிகளை விரட்டி அடித்தார். 4வது வீடியோவில் மாளவிகாவுடன் ரொமான்ஸ். 5வது வீடியோவில் மாஸ்டர் வில்லன் விஜய் சேதுபதி அதகளப்படுத்தினார்.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் 6வது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய்யும், விஜய் சேதுபதியும் சேர்ந்து எதிரிகளை அடித்து துவம்சம் செய்து தரமான சம்பவம் செய்கிறார்கள். அதோடு, விஜய் சேதுபதி செமையாக டான்ஸும் ஆடுகிறார். ஆனால், மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியாவை ஏன் இன்னும் காட்டவில்லை என்று சில ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

வில்லன் விஜய் சேதுபதி மாஸ்டர் படம் ஜனவரி 13ம் தேதி ரிலீஸாகிறது என்று தெரிவித்து மாஸ்டர் படத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் சேதுபதி சிலுவையும் மாலையும் சேர்த்து போட்டு எம்மதமும் சம்மதம் என்பதைக் காட்டியுள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில், மாஸ்டர் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் திருவண்ணாமலைக்கு சென்று அருணாச்சலேஸ்வரரிடம் பிரார்த்தனை செய்துள்ளனர். அந்த புகைப்படங்களையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...