மாஸ்டர் படத்தில் அந்த காட்சி நீக்கப்பட்டது இதனால் தானா?

3 years ago 586

கோலிவுட் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் விஜய்.  இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். 

இந்தப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகிய பலர் நடித்து இருந்தனர். 

இந்த திரைப்படம் கடந்த 21ம்தேதி அமேசான் ப்ரைம்-ல் வெளியாகியது.  இந்த நிலையில், மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி அமேசான் ப்ரைம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றது. 

இதை கண்ட ரசிகர்கள் உற்சாகம் அடைந்த அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் இந்த வீடியோ நீக்கப்பட்டது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், "படத்தின் ஃப்ளோ பாதிக்காமல் இருக்க வேண்டும். படத்தின் நீளம் மிக அதிகம் அத்துடன், விஜய் சார் இப்படி மாறுவது செகண்ட் ஆஃபில் தான். 

எனவே கதை பாதிக்கப்படும் என்று இது பல முறை யோசித்து யோசித்து மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த முடிவு தான் இது. இப்படி அந்த காட்சி படத்தில் இடம் பெறாமல் போனதற்கு அதிக காரணங்கள் இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...