மிரட்டலுக்கு பயந்த நடிகர் சித்தார்த் தாய்… களமிறங்கிய ரசிகர்கள்... நெகிழ்ச்சி சம்பவம்

3 years ago 298

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் சித்தார்த். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய தொலைபேசி எண்ணை பாஜகவின் ஐடி பிரிவினர் வெளியிட்டதாகவும் இதனால் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 500 மிரட்டல் கால்கள் வந்ததாகவும் கூறினார்.

இதற்கு சமூக வலைத்தளத்தில் சித்தார்த்துக்கு ஆதரவாக ரசிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வந்தார்கள். 

இதற்கு நடிகர் சித்தார்த், எனக்கு வரும் மிரட்டல்களைப் பார்த்து என் அம்மா மிகவும் பயந்துவிட்டார். 

அவருக்குத் தைரியம் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை, அதனால், உங்கள் ட்வீட்களைதான் அவர்களிடம் படித்தேன். என்னுடன் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. 

மிகவும் எளிய பின்னணியிலிருந்து வந்த மிகவும் சாதாரண மனிதர்கள் நாங்கள். எங்களுக்கு உங்கள் ஒவ்வொருவரின் வார்த்தைகளும் அத்தனை மதிப்புமிக்கவை என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...