மீண்டும் காதலில் விழுந்த பிக்பாஸ் சனம் ஷெட்டி... வைரலாகும் புகைப்படம்!

3 years ago 371

காதலர் தினத்தில் சனம் ஷெட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவால் அவர் மீண்டும் காதலில் விழுந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் நெற்றி வகுடில் குங்குமம் வைத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார் சனம் . 

இதனால் அவருக்கு ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு மறுப்பு தெரிவித்த சனம் ஷெட்டி தனது வீட்டில் திருமணமான பெண்களுக்குத் தான் நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்றும் விளக்கமளித்தார்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒருவரது கையைப் பிடித்தபடி நீங்கள் என் உலகத்தை ஒளிர செய்திருக்கிறீர்கள் மோன். காதலர் தின இரவு விருந்துக்கு நன்றி' என்று புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார். 

அவரது இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும், அந்த அதிர்ஷ்டசாலி யார், மோன் என்பது யார் என்று கூறுங்கள் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் ஒரு சிலர் வாழ்த்து தெரிவித்தும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

முன்னதாக இரண்டு ஆண்டுகளாக காதலித்து, திருமணம் நிச்சயம் செய்யிக்கப்பட்ட நிலையில் , திருமணம் செய்ய மறுப்பதாக பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி காவல்துறையில் புகாரளித்தார். 

இதையடுத்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை தெரிவித்து பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...