மீண்டும் சித்தி 2-வில் இணைந்த பிரபல வில்லி நடிகை - ரசிகர்கள் வரவேற்பு!

3 years ago 457

சன் டிவி-யில் கடந்த 1999 முதல் 2001 வரை ஒளிபரப்பான மெகாஹிட் சீரியல் சித்தி. நடிகை ராதிகா சாரதா கேரக்டரில் நடிக்க அவரது கணவராக நடிகர் சிவகுமார் நடித்திருந்தார். 

சின்னத்திரை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது சித்தி சீரியல். இந்த மெகா ஹிட்டை தொடர்ந்து சன் டிவி-யில் சுமார் 20 ஆண்டுகளாக இரவு 9:30 மணிக்கு நடிகை ராதிகா பங்கு பெற்ற சீரியல்களான அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி மற்றும் சந்திரகுமாரி போன்ற சீரியல்கள் வரிசையாக தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.

நடிகை ராதிகா நடித்த சந்திரகுமாரி சீரியல் சரியாக போகாத காரணத்தினால் சன் டிவி முதல் முறையாக ராதிகாவின் சீரியலை இரவு 9.30 ஸ்லாட்டிலிருந்து, மாலை நேரத்திற்கு மாற்றியது. 

இதனை தொடர்ந்து அந்த சீரியலில் இருந்து விலகினார் ராதிகா. சில மாத ஓய்விற்கு பின் தனது மாபெரும் வெற்றி சீரியலான சித்தி-2 வுடன் சன் டிவி-க்கு திரும்பினார். 

நடிகை ராதிகாவின் ராடான் மீடியாவொர்க்ஸ் நிறுவனத்துடன், சன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் சித்தி 2 சன் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

சித்தி 2 சீரியலில் நடித்து வந்தவர் தமிழ் சீரியலின் வில்லி நடிகையான காயத்திரி யுவராஜ். சீரியல் துவக்கப்பட்ட போது நிகிலா ராவ் என்பவர் நடித்து வந்த நந்தினி கேரக்ட்ரில் அவருக்கு பதிலாக மாற்றப்பட்டவர் காயத்திரி யுவராஜ். நந்தினி கேரக்டரில் நடித்து வந்த காயத்ரி யுவராஜ் சில நாட்களாக சீரியலில் காணப்படவில்லை.

இந்நிலையில் சிறிய இடைவெளிக்கு பின் தான் மீண்டும் சித்தி 2 சீரியலில் நடிக்கும் தகவலை அதிகாரபூர்வமாக பதிவிட்டுள்ளார் நடிகை காயத்ரி யுவராஜ். இது தொடர்பாக தனது இன்ஸ்டாவில் புடைவை கட்டி இருக்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ள நடிகை காயத்ரி, #chithi2serial #suntv என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி உள்ளார். இதன் மூலம் சித்தி 2வில் மீண்டும் நந்தினியாக நடிக்க இருக்கும் தகவலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்.




 
NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...