மீண்டும் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்கும் கனகா! என்ன சொல்றார் தெரியுமா?

3 years ago 341

மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 

40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1999-ல் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்த பின்  சினிமாவை விட்டு விலகினார்.

தற்போது மீண்டும் நடிக்க வருகிறார் கனகா. இதுகுறித்து கனகா வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் நடிக்க வந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. 

சில காரணங்களால் இடையில் நடிக்கவில்லை. இப்போது எனக்கு 50 வயது ஆகிறது. தற்போதைய சினிமாவின் போக்கு மாறி இருக்கிறது. ஒப்பனை, சிகை அலங்காரம், துணி மணிகள், செருப்பு, நகை, பேசுவது, சிரிப்பது எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது.

நான் ஏற்கனவே நடித்த மாதிரி நடித்தால் பழைய மாதிரி இருக்கிறது என்பார்கள். மீண்டும் நடிக்க ஆர்வம் உள்ளதால் சினிமாவின் புதிய நுட்பங்களை கற்று வருகிறேன். எனக்கு மன உறுதி இருப்பதால் விரைவில் கற்றுக்கொள்வேன்’' என்று பேசி உள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...