மீண்டும் சீரியலில் நடிக்க வந்த அண்ணியார்... எந்த சீரியல், தொலைக்காட்சி தெரியுமா?

3 years ago 313

இந்தக் காலத்திலும் சரி முன்னரும் சரி சீரியலுக்கு அடிமையாகாதவர்களே இருக்க முடியாது. 

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அது தான் பிரதான பொழுதுபோக்காக உள்ளது.

அப்படி மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட சீரியல்கள் அதிகம் உள்ளன, அதில் ஒன்று தான் தெய்வமகள்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. 2013ல் ஒளிபரப்பான இந்த சீரியல் 6 வருடங்களாக ஹிட்டாக ஓடியிருக்கிறது. 

அதிலும் இதில் மோசமான வில்லியாக வந்த ரேகா என்கிற அண்ணியாரை இதுவரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இப்போது அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் புதிய சீரியலில் தான் அவர் நடிக்க இருக்கிறாராம். தமிழும் சரஸ்வதியும் என்று அந்த புதிய சீரியலுக்கு பெயர் வைத்துள்ளார்களாம்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...