மீண்டும் தொகுப்பாளினியானார் அர்ச்சனா... எந்த டிவியில் தெரியுமா?

3 years ago 275

விஜய் தொலைக்காட்சியில் வருகிற பிப்ரவரி 14 அன்று காதலர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் நடனம், இசை மற்றும் காதல் ஆகியவற்றுடன் நட்சத்திரங்கள் அவர்களது வாழ்க்கைத் துணையுடன் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சியை வழங்க உள்ளனர். 

இதில் சில நிஜ ஜோடிகளும் திரையில் பார்த்து ரசித்த ஜோடிகளும் பங்கேற்கின்றனர். ‘காதலே காதலே’ என்ற பெயரில் வரும் இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க உள்ளார்.


இந்த நிகழ்ச்சி குறித்தும் விஜய் டிவியில் தனது புதிய பங்களிப்பு குறித்தும் தொகுப்பாளினி அர்ச்சனா கூறியதாவது:

ஜீ தமிழ் சேனலில் 6 ஆண்டுகள் தொகுப்பாளினியாகப் பிரவேசித்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் டிவிக்கு வந்தேன். அந்த ஒப்பந்தம் இன்னும் முடிவடையாததால் இப்போதும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் என்னைப் பார்க்க முடிகிறது. 

இது தொடருமா என்று இப்போது என்னால் கூற முடியாது. இன்றைய வாழ்க்கையை வாழப் பழகிக்கொள் என்று பெரியவர்கள் சொல்வார்கள் இல்லையா? அந்தமாதிரிதான் இப்போதைக்குக் காதலர் தினக் கொண்டாட்டமாக ‘காதலே காதலே’ நிகழ்ச்சி ஒன்றை மட்டும் தொகுத்து வழங்கியுள்ளேன். இனி தொடர்ந்து நிகழ்ச்சிகளை வழங்குவேனா என்பது அடுத்தடுத்து தெரிய வரும்!’’ என்றார், தொகுப்பாளினி அர்ச்சனா.

‘காதலே காதலே’ நிகழ்ச்சி முற்றிலும் காதலர் தினத்திற்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி.

இந்தக் காதல் நிகழ்ச்சியில் பங்கேற்க நிஜ வாழ்வில் தம்பதியர்களான சித்து - ஸ்ரேயா, சஞ்சீவ் - மானசா, வினோத் - சிந்து, மணிமேகலை - உசேன், நிஷா - ரியாஸ், தங்கதுரை - அருணா, ரேஷ்மா - மதன் பங்கேற்கின்றனர்.

திரையில் ஜோடிகளாக நடித்து வரும் பிரஜின் - ரேஷ்மா, பவித்ரா - திரவியம், நவீன் - நேஹா, தர்ஷா அசார் - புகழ், அருண் - ஃபரினா, பாலா - ரித்விகா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...