முண்டாசுப்பட்டி 2 தயாராகிறது ... தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்

3 years ago 311

தமிழ் சினிமா ரசிகர்களின் முதல் சாய்சாக இருப்பது காமெடி படங்கள் தான். காமெடிக்காகவே பிளாக்பஸ்டர் ஆன படங்கள் ஏராளம். அப்படி ஹிட்டான படங்களில் ஒன்று தான் முண்டாசுப்பட்டி.

2014 ம் ஆண்டு டைரக்டர் ராம்குமார் இயக்கத்தில், தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிப்பில் வெளிவந்த படம் காமெடி படம் தான் முண்டாசுப்பட்டி. 1980 களில் கிராமத்தில் நடப்பதை போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும்.

ஃபோட்டோ எடுத்தால் கெட்டது நடக்கும் என நம்பும் கிராமத்திற்கு வரும் இரண்டு ஃபோட்டோகிராபர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை காமெடியாக சொல்லி இருந்த படம் முண்டாசுப்பட்டி. இந்த படம் 2011 ல் வெளிவந்த குறும்படம் ஒன்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.

ரிலீசான முதல் வாரத்திலேலே ரூ.3 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது முண்டாசுப்பட்டி படம். சென்னையில் மட்டும் முதல் வார இறுதியில் ரூ.40 லட்சத்திற்கும் அதிகமாக வசூலை பெற்றது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஸ்டார் விஜய் வாங்கி இருந்தது.

விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, காளி வெங்கட், முனிஸ்காந்த், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்திருந்த இந்த படம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து, அனைவரிடமும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது.

தயாரிப்பாளர் சி.வி.குமார், கொரோனா பெருந்தொற்றிற்கு முன்பே தனது படங்கள் பலவற்றின் அடுத்த பாகங்களை இயக்க உள்ளதாக அறிவித்திருந்தார். அதில் ஒன்றாக தனது திருக்குமரன் என்டர்டைன்மென்ட் நிறுவனம் முண்டாசுப்பட்டி 2 படத்தை தயாரிக்க உள்ளதாக கூறி இருந்தார்.

இந்நிலையில் நேற்று, டைரக்டர் ராம்குமாருடன் இருக்கும் ஃபோட்டோ ஒன்றை பதிவிட்டு, இந்த ஃபோட்டோவை பார்த்ததும் உங்களின் எதிர்பார்ப்பு என்னவாக உள்ளது எனவும் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள விஷ்ணு விஷால், முண்டாசுப்பட்டி 2. ஏதுரா அந்து கேமிராவா என கேட்டுள்ளார்.

டைரக்டர் ராம்குமார், சைக்கோ த்ரில்லர் படங்களை எடுத்து வெற்றி கண்டவர். ராட்சசன் உள்ளிட்ட படங்களை இயக்கியதும் இவர் தான். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். 

இந்த படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார். இதனால் முண்டாசுப்பட்டி 2 படத்தின் வேலைகள் விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...