முதன் முதலாக தன் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சாண்டி..

3 years ago 239

டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவர் மத்தியிலும் நன்றாக ரீச் ஆகியிருக்கிறார். அவருக்கு ஏற்கனவே லாலா என்ற பெண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் சாண்டிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சாண்டிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருந்தாலும், வீட்டில் செல்லக்குட்டி மகனின் வரவு அவரை ரொம்பவும் உற்சாக மோடுக்கு தள்ளியது.

சிலநாள்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் தன் குழந்தையின் கை புகைப்படத்தை மட்டும் போட்டிருந்தார். இப்போது தன் குழந்தையின் மொத்த உருவத்தையும் போட்டிருக்கிறார் சாண்டி.

இந்த புகைப்படத்திக் இவர்தான் எனது ராஜா என கேப்சன் போட்டுள்ளார். இந்தக் குழந்தைக்கு ஷான் மைக்கேல் என்றும் அவர் பெயர் வைத்துள்ளார்.

இந்த குழந்தையை வாழ்த்திய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், அனைவரது ஆசிர்வாதமும் குழந்தைக்கு வேண்டும் என்றும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். சாண்டியின் மகனின் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...