முதன்முறையாக கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவருடன் போட்டோ ஷுட் நடத்திய நடிகை

3 years ago 487

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பி-யில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிபிரியனும், பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் வெண்பா கதாபாத்திரத்தில் ஃபரினாவும் நடித்து வருகின்றனர். 

இந்த கதையில் கண்ணம்மாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கு வெண்பா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறது. அதிலும் வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் வியக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். இதற்கு முன் இவர் சில சீரியல்கள் நடித்தாலும் பாரதி கண்ணம்மா தான் பெரிய ரீச் கொடுத்தது என்றே கூறலாம்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஃபரினா, போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து தனது பேஜில் ஷேர் செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது முதல்முறையாக கணவருடன் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 


அதில் தனது வயிற்றை பிடித்தவாறு போஸ் கொடுத்துள்ள ஃபரினா அழகாக இருக்கிறார். இந்த போட்டோஷூட் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக ஷேர் செய்துள்ளார்.

அண்மையில் சிவப்பு நிற உடை அணிந்து நீச்சல் குளத்தில் தண்ணீருக்கு அடியில் இருந்தவாறு வயிறு தெரியும் வகையில் போட்டோ ஷுட் நடத்தினார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஃபரினா ஷேர் செய்திருந்த நிலையில், இதுவரை 4.95 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...