மீசையை முறுக்கு படத்தில் அறிமுகமாகி, கண்ணை நம்பாதே படம் வரை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஆத்மிகா, இணையதளம் ஒன்றுக்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:
''முதல் படத்தில் இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்தும், அது எனக்கு தெரியவில்லை. 'ஓ படம் ஹிட்டா? நம்மை ஏத்துக்கிட்டாங்களா?' என்று தான் தோன்றியது.
ஷூட்டிங் போது என் காலில் இருந்து அப்படியே ஜூம் அப் பண்ணுவாங்க, அப்போ நான் கெஞ்சி கேட்டுக்கிட்டேன், 'இப்படியெல்லாம் ஷாட் வைக்காதீங்க, ஒருவேளை அவங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், கல் தூக்கி எறிந்துவிடப் போறாங்க, பில்டப் வேண்டாம்' என்று கூறினேன்.
நிறைய பேருக்கு முதல் படம் அப்படி அமையாது. திருப்பி, என்னால் அப்படி ஒரு படம் பண்ண முடியுமா என்பது தெரியாது. அதை அனுபவிக்காமலேயே அந்த தருணம் கடந்து விட்டது.
அது ஒரு கனவு மாதிரி இருக்கிறது. 'ஓ நம்மை ஏத்துக்கிட்டாங்களா? நாமளும் செலிபிரிட்டியா?' என்றெல்லாம் தோன்றியது. எல்லாமே அப்போ புதுசா இருந்தது.
நிறைய பேர் இன்னும் என்னை நிலா என்று தான் அழைக்கிறார்கள். மீசையை முறுக்கு படம் உண்மையில் மறக்க முடியாதது. ஆதி அலுவலகத்திலிருந்து அழைத்ததும், அவர் இசையமைப்பாளர் தானே, 'நாம பாடுறது அவருக்கு தெரியுமோ, அதனால் பாடுவதற்கு அழைத்திருக்கிறார்கள்' என்று தான் அங்கு போனேன்.
அந்த நேரம் தனி ஒருவன் வந்திருந்தது. அவர் இசை பயங்கரமா பேசப்பட்டுக் கொண்டிந்த நேரம் அது. அங்கு போன பிறகு தான், ஆடிசன் போக சொன்னார்கள். அப்போதும் அவர் தான் ஹீரோ என தெரியவில்லை. எல்லாம் முடிந்த பிறகு, ஆதி தான் ஹீரோ என்பது தெரியவந்தது.
ஆடிசன் முடித்துவிட்டு, தேர்வுக்காக காத்திருக்கும் மாணவி போல அவர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது, அந்த அலுவலக சமையல்கார பெண் தான், 'ஏம்மா. நீ தான் செலக்ட் ஆகியிருக்க.
மேல அதான் பேசிக்கிறாங்க, கவலைப்படாத, நான் சொன்னேன்னு சொல்லிடாதா' என்று என்னிடம் கூறினார். அதை கேட்டதும் அவ்வளவு மகிழ்ச்சியாகிவிட்டேன்.
ஹீரோயின் என்பதால், உடலில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஃபிட்னஸ் ரொம்ப முக்கியம் என்பதால், அதற்கு நான் மெனக்கெடுவேன். உடற்பயிற்சி எனக்கு உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மனரீதியாகவும் எனக்கு பெரிய அளவில் பலன் தந்தது.
அதனால் நிறைய நேரம் வொர்க்அவுட் பண்ணுவேன். அது என்னை ரீசார்ஜ் செய்து கொள்வதாக உணர வைக்கிறது,''
என்று அந்த பேட்டியில் ஆத்மிகா கூறியுள்ளார்.