முதலில் விபத்து, இப்போ கொரோனா பாதிப்பு: வாரிசு நடிகருக்கு ஏற்பட்ட நிலை

3 years ago 332

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படும் திரையுலக பிரபலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, எனக்கு கோவிட் பாசிட்டிவ் என்று வந்திருக்கிறது. நான் என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னை சந்தித்த அனைவரும் தயவு செய்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

வீட்டில் இருங்கள், பத்திரமாக இருங்கள், வாய்ப்பு கிடைக்கும்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நான் நலமாக இருக்கிறேன். அதனால் என் நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் என்னை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

அல்லு அர்ஜுனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களும், திரையுலகினரும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

முன்னதாக புஷ்பா படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு அல்லு அர்ஜுன் காரில் வீட்டிற்கு வர, அவரின் வேனிட்டி வேனில் படக்குழுவினர் வந்தார்கள். ரூ. 7 கோடி மதிப்புள்ள அந்த வேனிட்டி வேன் விபத்துக்குள்ளானது.

அல்லு அர்ஜுனுக்கு கொரோனா என்று தெரிந்த ரசிகர்களோ, முதலில் வாகன விபத்து, தற்போது கோவிட் 19, அண்ணனுக்கு நேரம் சரியில்லை என்கிறார்கள்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...