முதல் மனைவி இருக்கும் போதே பலமுறை திருமணம் செய்த நடிகர்கள் தெரியுமா..?

3 years ago 267

முதல் மனைவி இருக்கும் போதே 2-வது திருமணம் செய்துகொண்ட நடிகர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

திரை வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் ஜொலித்த நடிகர் எம்.ஜி.ஆர் 3 திருமணங்களை செய்தவர். முதல் மனைவி பார்கவி நோய்வாய்ப்பட்டு இறந்தவுடன், சாதனந்தவதி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவரும் உடல் நலக்குறைவால் இறந்துவிட நடிகை ஜானகியை மூன்றாவது திருமணம் செய்தார்..

திரைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள கமல்ஹாசன் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சையில் சிக்கி வருகிறார். முதலில் வாணி என்ற பெண்ணை திருமணம் செய்த கமல், அவருடன் 10 வருடங்கள் வாழ்ந்துவந்தார்.

பின்னர் இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்த நிலையில், நடிகை சரிகாவுடன் லி டூ கெதரில் வாழந்து வந்தார். அவரை பிரிந்த நிலையில், கௌதமியுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். எனினும் தற்போது இருவரும் பிரிந்துவிட்டனர்..

நவசர நாயகன் கார்த்தி 1988-ம் ஆண்டு ராகினி என்ற நடிகையை திருமணம் செய்தார். பின்னர் 1992-ம் ஆண்டும் அவரின் தங்கை ரதியையும் திருமணம் செய்து கொண்டார்.

இதே போல் நடிகர் சரத்குமார் 1984-ம் ஆண்டு சாயா என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் ராதிகாவை காதலித்து 2 வது திருமணம் செய்துகொண்டார்..

நடிகர் பிரகாஷ்ராஜ், லலிதாகுமாரி என்ற நடிகையை திருமணம் செய்துகொண்டார். பின்னர் போனி வர்மா என்ற நடன இயக்குனரை தனது 45-வது வயதில் திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...