முதல் மனைவி இறந்த ஓர் ஆண்டிலேயே அடுத்த காதல்... பாக்கியராஜின் திருமணம் வாழ்க்கை...

3 years ago 896

கோலிவுட் திரையுலகில் '16 வயதினிலே படத்தில், துணை இயக்குனராக அறிமுகமான நடிகர் பாக்யராஜ், பின் நடிகர், இயக்குனர் என வெள்ளித்திரையில் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு ஜொலித்தவர். 

இவரின் பட்டறையில் பாடம் கற்ற பலர் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்கள். 

பாக்யராஜின் தனித்துவமான  படைப்புகளுக்கு தமிழ் மட்டும் இன்றி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல ரசிகர்கள் உள்ளனர். நடிகர் பாக்யராஜ் குடும்பத்தை கலைக்குடும்பம் என கூறலாம். 


இவருடைய மானைவி 80 களில் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். 'டார்லிங் டார்லிங்' படப்பிடிப்பின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது.

இவர்களுக்கு சாந்தனு என்கிற மகனும் சரண்யா என்கிற மகளும் உள்ளார். சாந்தனு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகம்மாகி தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். 

பாக்யராஜ் தன் படத்தில் நடித்த நடிகையான பிரவீனாவை 1981ல் காதலித்து முதல் திருமணம் செய்து கொண்டார். 2 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரவீனா 1983ல் மஞ்சள் காமாலையால் இறந்துள்ளார்.

இதையடுத்து, அடுத்த ஆண்டே நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அவரது முதல் மனைவி பிரவினாவை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் முன்னிலையில் திருமணம் செய்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

 
NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...