முத்து படத்தில் வயதான ரஜினி வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

3 years ago 584

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதுவரை இவரது நடிப்பில் 165 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்கள் என பல உண்டு.

அப்படியான படங்களில் ஒன்றுதான் முத்து. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்து இருப்பார். 

மேலும் இந்த படத்தில் சரத்பாபு ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் படத்தில் சிறிய காட்சிகள் இடம்பற்றாலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தது வயதான ரஜினி வேடம்.

இந்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது வினு சக்கரவர்த்தி தான் என்பது தெரியவந்துள்ளது. சில காரணங்களால் அவரால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை. ஒரு வேலை கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் ரஜினியையும் மிஞ்சியிருப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...