முந்தானை முடிச்சு படத்தில் நடித்த பொடியனா இவர்? கடைசிகாலத்தில் இப்படி ஒரு நிலையா..!

3 years ago 471

சிலர் என்னதான் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும் வெளியுலகுக்கு தெரியமாட்டார்கள். ஆனால் சிலருக்கோ ஒரு படமே பெரிய அளவில் முகவரி கொடுத்துவிடும். 

அந்தவகையில் 450 படங்களில் நடித்திருந்தாலும் முந்தானை முடிச்சு படம் தான் தவக்களை என்னும் காமெடியனை அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்தது.

இவரது அப்பாவும் நடிகர் தான். சினிமாவில் சின்ன, சின்ன ரோல் செய்துவந்த இவர் பொய் சாட்சி என்னும் படதில் நடித்துக் கொண்டிருந்தார். 


அப்போது சூட்டிங் பார்க்க சிட்டிபாபு என்னும் தவக்களை போயிருக்கிறார் அங்கே தவக்களையைப் பார்த்த குள்ளமணி என்ற நடிகர்தான், இயக்குனர் பாக்கியராஜிடம் அறிமுகம் செய்துள்ளார். 

அவர்தான் இவரது தோற்றத்தையும், உடல் மொழியையும் பார்த்துவிட்டு முந்தானை முடிச்சுப் படத்தில் வாய்ப்புக் கொடுத்துள்ளார். அதில் தான் அவருக்கு தவக்களை என்னும் பெயரும் கிடைத்தது.

காக்கி சட்டை, ஆண்பாவம், பாட்டுவாத்தியார் உள்பட மட, மடவென 496 படங்களில் நடித்திருக்கிறார் தவக்களை. நன்றாக சம்பாதித்து கொண்டிருக்கும்போதே தன் நண்பர்களோடு சேர்ந்து சினிமா கம்பெனி ஆரம்பித்தார். 

அதன் மூலம் மண்ணில் இந்தக் காதல் என்னும் படத்தை எடுத்தார். அந்தப்படம் தோல்வியில் முடிந்ததால் சொந்த வீட்டையே விற்கும் சூழலுக்குள் தள்ளப்பட்டார். இதனால் மலையாள நடிகர் பிரிதிவிராஜ் நடித்த அற்புதத்தீவு படத்துக்குப்பின் இவர் பெரிதாக எதிலும் நடிக்கவில்லை.


இவர் 42 வயதில் அந்த படத்தில் நடித்துவிட்டு கேரளத்தில் இருந்து திரும்பிய போது மார டை ப் பு ஏற்பட்டு உ யி ர் இ ழ ந் து வி ட் டா ர். அந்த படம் வெளியாகும் முன்பே தவக்களையின் உயிர் போய்விட்டது.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...