முன்னாள் காதலனுடன் மீண்டும் ரொமான்ஸ்! கடுப்பாகும் பிரபல நடிகை

3 years ago 584

தமிழ் சினிமாவில் வட இந்திய நடிகைகள் அறிமுகமாவதை போன்று ஆரம்பத்தில் அறிமுகமாகினார் அந்த நடிகை. முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தாலும் உடல் எடையை வைத்து படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

இடையில் ஆன்மீகத்தில் ஈடுபட்டு இருந்த நடிகருடன் ரோமான்ஸ் செய்து பின் பார்ட்டி பப் என சுற்றி வந்தார். கொஞ்ச காலம் இந்த காதல் நன்றாக சென்று கொண்டிருக்க திடீரென அந்த நடிகையின் தாயார் உள்ளே புகுந்து என்னுடைய மகள் சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று கூறி அந்த காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன் பிறகு பல வருடங்கள் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்த இந்த இருவரையும் வைத்து சமீபத்தில் ஒரு படம் உருவானது. முதலில் கெஸ்ட் ரோல் என்று தான் அந்த நடிகரை கூட்டி வந்தார்களாம். 

அதன் பிறகு அந்த நடிகரின் காட்சிகள் படத்திற்கு செம பிளஸ் ஆகிவிட்டதால் மேலும் சில காட்சிகளை சேர்த்து தற்போது மொத்தமும் அந்த நடிகரின் படமாக மாறிவிட்டதாம்.

ஆனால் அந்த நடிகைக்கு அது 50 ஆவது படம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை தேர்ந்தெடுத்தார் அந்த நாயகி. ஆனால் கடைசியில் அது அந்த நடிகரின் படமாகவே மாறிவிட்டதால் தன்னுடைய முன்னாள் காதலன் மீது செம கடுப்பில் உள்ளாராம் அம்மணி.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...