"மூக்குத்தி அம்மன்" படத்தில் முதலில் நடிக்க விருந்தது இந்த நடிகையா?

4 years ago 267

ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணனின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஹாட்ஸ்டரில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மூக்குத்தி அம்மனாக இப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்திருந்தது படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. 

ஆனால், முதன் முதலில் மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது நடிகை ஸ்ருதி ஹாசன் என்று இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கூறியுள்ளார்.

 நடிகை ஸ்ருதி ஹாசனிடம் கதை சொல்லி ஓகே செய்து பிறகு, நடிகை நயன்தாராவும் இந்த கதையை கேட்டு ஓகே சொல்லிவிட்டாராம். இதனால் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தாராம் ஆர்.ஜே. பாலாஜி.


கொரோனா பிரச்சனை ஆரம்பிக்கிறது முன்னாடியே கன்னியாகுமரி மற்றும் சென்னையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் படக்குழுவினர் நடத்தி முடித்த படக்குழுவினர், தீபாவளி திருநாளை முன்னிட்டு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த படத்தை வெளியிட்டனர்.

அம்மன் வேடத்தில் நடித்திருந்த நயன்தாராவின் நடிப்புக்கும். கலகலப்பாக சென்ற படத்திற்கும் தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 
 

இந்த படத்தில், நயன்தாரா முதல் முறையாக அம்மன் கெட்டப்பில் நடித்திருந்தார். மேலும் அம்மன் வேடத்தில் நடிப்பதால் விரதம் இருந்தார் என இந்த படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...