பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க படம் மூலம் அறிமுகமானவர் கிஷோர். இப்படம் தேசிய விருது பெற்றது. தொடர்ந்து, கோலி சோடா, கோலி சோடா 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும், சகா, ஆறு அத்தியாயம், வஜ்ரம், நெடுஞ்சாலை, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை, மாடல், மற்றும் தொகுப்பாளரான ப்ரீத்தி குமாரை காதலித்து வந்தார்.
கிஷோரை விட 4வயது மூத்தவர். லட்சுமி வந்தாச்சு, நெஞ்சம் மறப்பதில்லை, பிரியமானவள், சுந்தரி நீயும் சுந்தரன் நானும், மற்றும் வானத்தப்போல உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
தற்போது, இவர்களுக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.